இறந்து போன மகள் குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி போட்ட கடைசி பதிவு.! கண்களில் நீரை வர வைக்கும்..

vijay antony daughter meera : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சென்னையில் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக தமிழ் சினிமா உலகில் இருந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன் அங்காடித்தெரு என பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தவர் அதன் பிறகு நான் ஈ, சைத்தான், பிச்சைக்காரன், கொலை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகள் மீரா சென்னையில் சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

விஜய் ஆண்டனி தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் தன்னுடைய வீட்டில் தான் வசித்து வந்தார். மீராவின் அறை கதவு நீண்ட நேரமாக திறக்காததால் கதவை திறந்து பார்த்தால் மீரா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார் அப்பொழுது அவர்கள் பெற்றோர் மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள் இவர் அதிகாலை 3 மணி அளவில் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் இது குறித்த போலீசார் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்துள்ளார்  அதுமட்டுமில்லாமல் மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.

மீரா மன அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது விஜய் ஆண்டனி சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிக்கடி குரல் கொடுத்து வருபவர் தனது எதிர்ப்பை தெரிவிப்பதில் எந்த ஒரு சமரசமும் ஆக மாட்டார் இந்த நிலையில் சமீபத்தில் கூட ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பட்ட குளறுபடி காரணமாக ரகுமாரனுக்கு ஆதரவாக பேசி வந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் விஜய் ஆண்டனியின் மகள் இறந்து விட்டதால் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அப்படி சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவுகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில் விஜய் ஆண்டனியின் மனைவி தன்னுடைய மகள் குறித்து சமீபத்தில் வெளியிட்ட பதிவு தான் தற்பொழுது வேகமாக வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது இதயம் அமைப்பு மற்றும் நெருப்பு எமோஷன் களுடன் எனது வலிமையின் பின்னால் உள்ள சக்தி என் கண்ணீருக்கு ஆறுதல் என் மன அழுத்தத்திற்கு காரணம் குறும்புத்தனம்  என் தங்க கட்டி செல்லக்குட்டி மீரா விஜய் ஆண்டனி வாழ்த்துக்கள் பேபி என அவர் பதிவிட்டுள்ளார் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

fathima
fathima