தமிழ் சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் விஜய் ஆண்டனி. முதலில் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு நடிகராக விஸ்வரூபம் எடுத்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓட்டிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்போது இயக்குனராகவும் அடி எடுத்து வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்த காணப்பட்டது ஒரு வழியாக பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடித்திருந்தார். படம் மே 19ஆம் தேதி வெளியானது படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்த..
ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பிச்சைக்காரன் 2 படம் கைதட்டல் வாங்கியது. அதன் காரணமாக நாளுக்கு நாள் இந்த படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது இதுவரை மட்டுமே 30 கோடியின் மேல் வசூல் செய்துள்ளது வெகு விரைவில் 50 கோடியை பிச்சைக்காரன் 2 திரைப்படம் தொடும் என பலரும் கூறுகின்றனர்.
இதனால் விஜய் ஆண்டனி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் ஒரு படம் வெற்றி பெற்றால் சக்சஸ் பார்ட்டி வைப்பார்கள் அதுபோல விஜய் ஆண்டனி தற்போது சக்சஸ் பார்ட்டி ஒன்று வைத்துள்ளார். பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு போட்டு அசத்தியுள்ளார். சில தினங்களுக்கும் முன்பு பிச்சைக்காரர்களுக்கு தேவையான பொருள்களை வழங்கி..
இருந்த விஜய் ஆண்டனி தற்போது நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை 5 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் பிச்சைக்காரர்களுக்கு விஜய் ஆண்டனி தன் கையால் பிரியாணி பரிமாறி அசத்தினார் மேலும் அவர்களுக்கு ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளை வழங்கி அவர்களுடைய பசிகளை போக்கி உள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/vijayantony/status/1662429640714244096?s=20