பிச்சைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த விஜய் ஆண்டனி.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக மாறியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது இயக்குனராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் பிச்சைக்காரன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு இருக்கிறது அதன் பிறகு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனியின் உடல் நலமாகி கொண்டே வரும் நிலையில் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்டு இருக்கிறார் அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து காவியா தாப்பர், யோகி பாபு, மன்சூர் அலிகான், ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விஜய் ஆண்டனி திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் ஆண்டனிக்கு அடிபட்டதில் இருந்து என்ன ஆனது என்று தெரியாமல் இருந்து வந்த ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

pichaikkaran 2

Leave a Comment

Exit mobile version