அதிரடியாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி.! ஒருவேளை PS2வுக்கு போட்டியா இருக்குமோ.?

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் உருவாகி தற்பொழுது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் பிரபலம் தான் விஜய் ஆண்டனி இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

அவ்வாறு பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்து விட்டது. மேலும் தற்பொழுது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமல்லாமல் அவரே இந்த திரைப்படத்தையும் இயக்கி வந்துள்ளார்.இந்த திரைப்படத்தில் இவருக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுதல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து தற்பொழுது இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும்.

என்பதை பற்றி நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதன்படி பார்த்தால் நாளை காலை 11 மணி அளவில் டிரெலர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வருகின்ற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம்.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கி தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.

என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படமாகத் தான் இருக்கப்போகிறது என்றும் தற்பொழுதே தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment