விஜய் முடிந்தால் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும் அது வரலாராக மாறும் எஸ் ஏ சந்திரசேகர் அதிரடி.!

0

நடிகர் விஜய் தற்பொழுது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற இருக்கிறது.

இந்நிலையில் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் யூட்யூபில் ஒரு செய்தியை பேசியுள்ளார்.

அதில் விஜய்யின் தந்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தார். இதனையடுத்து விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

அந்த கட்சியில் அவரது தாயுமான சோபா அந்த கட்சியின் பொறுப்பாளராக இருந்து வந்தார் விஜய் கூறியதை வைத்து அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார்.

இந்த தகவல்கள்  ரசிகர்களிடமும் சினிமா வட்டாரத்திலும் வேகமாக பரவியது.

அதுமட்டுமல்லாமல் எனது பிள்ளை நல்லா வருவ தற்காக அவரைக் கேட்காமல் இந்த காட்சியை நான் தொடங்கி இருந்தேன் ஆனால் இப்பொழுது அந்தக் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும். இதற்கு நான் கவலைப்பட மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

நான் இன்றும் கூட விஜய்யை ஒரு குழந்தையாக தான் பார்த்துக் வருகிறேன் என்றும் பேசயுள்ளார்.

இதனையடுத்து விஜய் எனது புகைப்படங்களோ அல்லது எனது பெயரை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார். எஸ். ஏ. சந்திரசேகர் அதுபோல் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை.

அப்பொழுது அப்பாவின் மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறு தானே என்று விஜய் தந்தை கூறியிருந்தார்.