17 வருடத்திற்கு பிறகு ஒத்தைக்கு ஒத்தையாக மல்லுக்கட்ட போகும் விஜய் மற்றும் சூர்யா.! தளபதி படத்தை தாண்டி எகிறும் சூர்யா படத்தின் எதிர்பார்ப்பு.

0

After 17 years vijay and suriya movie release in same date :  தளபதி விஜய் மற்றும் சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள், இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, சமீபகாலமாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, அதனால் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

ஆனால் சூர்யா கடந்த சில வருடங்களாகவே மாபெரும் ஹிட் கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார், ஏனென்றால் சமீபகாலமாக சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை, இந்த நிலையில் சூர்யா மற்றும் விஜய் நேரடியாக மோதிக் கொள்ள இருக்கிறார்கள்.

விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இவர்கள் கூட்டணியைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் வெளியாகிய திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதேபோல் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ஏனென்றால் இதுவரை வெற்றிமாறன் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது இல்லை.

vijay and suriya
vijay and suriya

இப்படி இருக்கும் நிலையில் வெற்றிமாறன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது, இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது, அதனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் சூர்யா நேரடியாக மோதிக் கொள்ள இருக்கிறார்கள்.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஏனென்றால் முருகதாஸ் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும், அதேபோல் வெற்றிமாறன் திரைப்படத்திற்கு சொல்லவே வேண்டாம் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிதாமகன் மற்றும் திருமலை  படத்தின்  மூலம் இருவரும் மோதிகொண்டது அதற்க்குபிறகு 17 வருடத்திற்கு பிறகு இந்த இரண்டு படத்தின் மூலம் மொத இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.