விஜய்க்கு தைரியம் இருந்தா சிவகார்த்திகேயனுடன் மோத சொல்லுங்கள்பார்க்கலாம்.! அரசியல் பிரபலம் அதிரடி கருத்து

0
vijay sivakarthikeyan
vijay sivakarthikeyan

நீண்ட வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த், ரஜினிகாந்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள். ரஜினியை அடுத்து முன்னணி நடிகர்களாக தமிழ்த்திரையுலகில் இருப்பவர் அஜித் விஜய் இவர்கள் இருவரை அவரவர் ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டாராக தான் பார்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிக்கு அடுத்த சூப்பர்ஸ்டார் இடத்தில் விஜய் தான் நிரப்புவார் என்றார், மேலும் நடிகர் சிம்பு விஜய் இடத்தில் இருக்க வேண்டியவர் எனவும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் சிம்பு நேரம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கூறினார் இந்த நிலையில் இதுகுறித்து வார இதழுக்கு பேட்டி கொடுத்த மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா, சினிமா தொடர்பான எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்திலிருந்து பிறந்து சின்னத்திரையில் கால்தடம் பதித்து பின்பு வெள்ளித்திரையில் சாதித்து சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பதற்கு நகர்ந்து கொண்டே இருப்பவர் சிவகார்த்திகேயன் தான்.

விஜய்க்கு துணிவு இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு ரிலீஸ் செய்து போட்டி போட சொல்லுங்கள் பார்க்கலாம், வசூலில் யார் கில்லி என தயாரிப்பாளர் கூறிவிடுவார்கள். ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை நடிகர் சிவகார்த்திகேயன் தான் நிரப்புவார் என்றும் கூறியுள்ளார். இப்படி சசிகலா புஷ்பா பற்ற வைத்தது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை.