விஜயுடன் புதிய படம் மேடையிலேயே சிறுத்தை சிவா கொடுத்த மாஸ் அப்டேட்.

இயக்குனர் சிவா கார்த்தி நடித்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு அஜித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் தலைவர் 168 திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் பங்கேற்ற சிறுத்தை சிவாவிடம் தளபதி விஜயுடன் எப்பொழுது கூட்டணி என கேட்டுள்ளார், அதற்கு சிறுத்தை சிவா விஜய் சார் என்னுடைய நண்பர் நிச்சயம் அவருடன் ஒரு படம் இணைந்து பண்ணுவேன் என அதிரடியாக மேடையிலேயே அறிவித்துள்ளார்.

அதனால் அடுத்து விஜய்யுடன் சிறுத்தை சிவா புதிய திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment