விஜய் முருகதாஸ் இணையும் திரைப் படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா.? வாய்பிளக்கும் ஹோலிவுட்

0

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்கில் வெளியிட இருக்கிறார்கள் படக்குழு, மாஸ்டர் திரைப்படம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாக வேண்டிய திரைப்படம் ஆனால் கொரனோ தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.

படத்தின் டீஸர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இன்னும் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகவில்லை, ஆனால் மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்று கூறியுள்ளார்கள் படக்குழு, விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

அந்த வகையில் விஜய் மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி சர்கார் என பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன இந்நிலையில் தற்போது மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறார்கள் அதுமட்டுமிலலாமல் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு பட்ஜெட் மட்டும் 150 கோடி எனக் கூறப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படத்தின் pre-production வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன, இந்த திரைப்படத்தின்  வேலைகள் முடிந்தவுடன் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.