“லியோ” உடன் புகைப்படம் எடுத்த லோகேஷ்.. படத்தில் விஜய் கெட்டப் இதுதானா.? ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த புகைப்படம்

ஷங்கர் அட்லீயை தொடர்ந்து தோல்வி கொடுக்காத இயக்குனர்கள் லிஸ்ட்டில் இளம் இயக்குனர் லோகேஷ் இணைந்து இருக்கிறார். இதுவரை மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற படங்களை கொடுத்துள்ளார் இந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் லோகேஷ் தற்பொழுது இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தளபதி விஜய் உடன் இணைந்து லியோ என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாக உள்ளதாம் முதல் கட்டப்படபிடிப்பு சென்னையில் முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிபிற்காக படக்குழு..

தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் சென்றது அங்கே கடும் குளிரென்று கூட பார்க்காமல் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் தனது படத்தின் ஷூட்டிங் முடியும் வரை எந்த ஒரு புகைப்படத்தையும் வீடியோவையுமே வெளியிட மாட்டார் ஆனால் லியோ படத்திலிருந்து அவ்வப் பொழுது புகைப்படங்கள் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது புரமோஷன் காக இப்படி செய்கிறதா அல்லது ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டிவிட இப்படி செய்கிறதா என்பது தெரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் தளபதி விஜய் உடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரைப்படத்தில் விஜய்யின் லுக் இதுதானா என கேட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ தளபதி விஜய் மற்றும் லோகேஷ் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

leo
leo

Leave a Comment