Leo box office : அடங்க மறுத்த லியோ.. அடக்கிய ரசிகர்கள் 7 வது நாள் வசூலில் சரிவை சந்தித்த லியோ.!

vijay and lokesh kanagaraj Leo box office day 7 collection : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வந்தது.

அதேபோல் book my showவிலும் 70 லட்சம் டிக்கெடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏழாவது நாளான இன்று பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவு சறுக்கியுள்ளது அதன் மொத்த வசூல் எவ்வளவு என்பதை இங்கே காணலாம்.

ஆரம்பத்தில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என பலரும் கூறினார்கள் ஆனால் ஆயிரம் கோடிக்கு வசூல் வாய்ப்பே இல்லை என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உண்மையை ஓப்பனாக கூறிவிட்டார். இந்த நிலையில் லியோ திரைப்படம் ஏழாவது நாள் முடிவில் 500 கோடி வசூலை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன ஆனால் தயாரிப்பு நிறுவனமான லலித் குமார் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஏழாவது நாளில் 516 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் இன்னும் லியோ திரைப்படம் 500 கோடியை தொடவில்லை எனவும் தொட்டு இருந்தால் இந்நேரம் லலித் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பார் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்திய அளவில் லியோ திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் 150 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வார நாளான திங்கள்கிழமை ஆயுத பூஜை செவ்வாய்க்கிழமை விஜயதசமி என பண்டிகை நாட்கள் என்பதால் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது ஆனால் தற்பொழுது லியோ திரைப்படத்தின் வசூல் அதிரடியாக குறைந்துவிட்டது வியாழக்கிழமை யான இன்றும் வெள்ளிக்கிழமையான நாளையும் லியோ திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் ஆனால் மீண்டும் சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் லியோ திரைப்படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.