போக்கிரி படத்தை கிண்டல் செய்ததால் விஜயும் அவரது அப்பாவும் என்னை தேடினாங்க. லொள்ளு சபா இயக்குனர் பேட்டி.! வீடியோ இதோ!!

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல படங்களை பாரபட்சம் பார்க்காமல்  கிண்டலும் கேலியுமாக கலாய்த்த நிகழ்ச்சி லொள்ளுசபா. சூப்பர் ஸ்டார் இலிருந்து புதுமுக நடிகர்கள் உள்ள படங்கள் வரை கலாய்த்து நம்மை சிரிப்புக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியில் இருந்து பல்வேறு நடிகர்கள் தற்போது தமிழ் திரையில் காமெடியன்களாக கலக்கி வருகிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சந்தானம், சுவாமிநாதன், பாஸ்கர் போன்ற பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபாவில் இருந்து வந்தவர்கள்தான்.
தற்பொழுது  லோல்லு சபா நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றாலும் தற்பொழுது யூட்யூபில் வைரலாகி வருகிறது.

லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா, மற்றும் சுவாமிநாதன் போன்ற அவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் லொள்ளுசபா இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். என்னவென்றால் விஜய்யின் போக்கிரி படத்தை  கலாய்த்ததால் விஜய்யும் அவரது தந்தையும் தங்களை தேடியதாக லொள்ளு சபா இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது சூட்டிங் எடுத்து முடித்து நாங்கள் உட்கார்ந்திருந்தோம். அப்போது எனக்கு ஆபீஸில் இருந்து போன் வந்தது. ஏன் ஆபீஸ்க்கு வரவில்லை இங்கு பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

நான் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு உங்கள் இருவரையும் விஜய்யும், விஜய் தந்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதை இப்பொழுது ஊடகங்கள் முன்பு  பகிர்ந்துகொண்டார். அவர்கள் தற்போது மறந்து இருப்பார்கள் எனவும் கூறினார்.

Leave a Comment