28 வருடங்களாக ரஜினியின் சாதனையை முறியடிக்காத விஜய், அஜித்!

RAJINI
RAJINI

ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்றால் அந்தப் படத்தில் கதை, பாடல், இசை, நடிகர்கள், நகைச்சுவை என அனைத்து விஷயங்களும் சரியாக அமைய வேண்டும் இதில் ஒன்று குறைந்தால் கூட கலவை விமர்சனத்தை பெரும். ஆனால் இந்த அனைத்திலும் மிகவும் பர்ஃபெக்டாக இருந்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

இவருடைய படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் இவருடைய தனித்துவமான ஸ்டைல், நடிப்பு போன்றவை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றது. எனவே சினிமாவில் அனைத்து நடிகர்களையும் ஓரம் கட்டி சாதித்து காட்டினார். மேலும் சின்னத்திரையில் கூட இவருடைய படங்கள் டிஆர்பியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

எனவே இவருடைய சாதனையை தற்பொழுது வரையிலும் எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற படம் தான் பாட்ஷா. இந்த படத்தில் ஆக்சன், காமெடி ,சென்டிமென்ட் என அனைத்தும் ஒரே படத்தில் இருந்ததன் காரணத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தில் ரகுவரன், நக்மா, ஆனந்தராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்த நிலையில் சின்னத்திரையில் வெளியாகி மொத்தம் 11.74 ரேட்டிங் கிடைத்தது. இவ்வாறு இந்த ரேட்டிங்கை இதுவரையிலும் அஜித், விஜய் திரைப்படங்கள் ஒன்று கூட முறியடிக்கவில்லை.

மேலும் இவர்களை அடுத்து கமலஹாசன் படத்தால் கூட இந்த சாதனையை முறியடிக்க வில்லை கிட்டத்தட்ட 28 வருடங்களாக டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் படங்களில் எந்த ஒரு முன்னணி நடிகரின் படத்தாலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.