விஜய் அஜித் ரசிகர்களின் அடிவயிற்றை கலங்க வைத்த டிஜிபி..! அப்படி என்ன சொன்னார் தெரியுமா

இளைஞர்கள்  அனைவருமே நன்றாக படித்து  நல்ல வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் மேலும் பாதுகாப்பு இல்லாத எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என டிஜிபி சைலந்திர பிரபு கூறிய அறிவுரை ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.

நேற்று கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த திரையரங்கில் தல அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது அப்பொழுது அந்த துணிவு திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்கள் பலவற்றையும் மறித்து அவற்றின் மேல் ஏறி நடனமாடி கூச்சல் போட்டது பொதுமக்களை அச்சுறுத்தியது.

மேலும் அஜித்தின் துணிவு திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் டேங்கர் மேல் ஏறிக்கொண்டு நடனம் அறிய பொழுது எதிர்பாராத விதமாக அவர் வழிக்கு கீழே விழுந்து விட்டார் இவ்வாறு அவர் விழுந்த நிலையில் அவருக்கு முதுகு தண்டின் நடுப்பகுதியில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புக்கு நேரிட்டது..

இவ்வாறு நடந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நமது சைலேந்திர பிரபு அவர்கள் ஒரு திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள் பாதுகாப்பான முறைகளை கையாள வேண்டும் அந்த வகையில் எதிரே வரும் லாரிகள் கண்டெய்னர் போன்றவற்றின் மேல் ஏறுவது மற்றும் கட்டவுட் மேல் ஏறி பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திரைப்படத்தை பார்த்துவிட்டு பொது மக்களுக்கும் பொது இடத்திற்கும் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நடந்து கொள்வது மிகவும் நல்ல குணம் என்று கூறியது மட்டும் இல்லாமல் இளைஞர்கள் அனைவரும் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று தங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.

மேலும் பொறுப்பில்லாமல் இளைஞர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் உயிரிழப்பு நேரிடுவது மட்டும் இல்லாமல் தங்களுடைய குடும்பத்தில் எதிர்காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்று சைலேந்திர பிரபு அவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Leave a Comment