விஜய் மற்றும் அஜித் சாதனையை தட்டி தூக்கி ஓரங்கட்டிய பிரபல நடிகர்.! யார் அந்த நடிகர் தெரியுமா.?

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் அஜித் மற்றும் விஜய், இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது, அதுமட்டுமல்லாமல் இவர்களின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அன்று திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்தளவு ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் தற்போது இருவரும் அவரவர்கள் பட வேலையில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள், விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின்  எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக் கிடக்கிறது, அதேபோல் அஜித்தும் வலிமை திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார், அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை கொண்டாட காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் டைட்டில் வெளியிடும் பொழுது ட்விட்டரில் 3.06 மில்லியன் ட்வீட்களை அள்ளியது.

அதன் பின் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் 3.43 டிவீட்களை அள்ளியது. ஆனால் தற்பொழுது இந்த இரண்டு படங்களையும் நடிகர் பவன் கல்யாண் ஓரங்கட்டி உள்ளார். தற்பொழுது இவர் நத்துவரும் வக்கீல் சாப். சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்த First லுக் டுவிட்டரில் இந்த இரண்டு படங்களையும் பின்னுக்கு தள்ளி 3.5 மில்லியன் டுவிட்களை பெற்று சவுத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment