ஒரே இயக்குனர்களால் இயக்கப்பட்ட விஜய் அஜித் திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

ஒரு இயக்குனர்களால் இயக்கப்பட்ட அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கே எஸ் ரவிகுமார் : இவர் இயக்கிய விஜய்யின் திரைப்படம் மின்சார கண்ணா, இந்தத் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அடுத்ததாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய அஜித் திரைப்படம் வில்லன். இந்த திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது.

K.S-ravi-kumar
K.S-ravi-kumar

விக்ரமன் : இவர் இயக்கிய விஜயின் திரைப்படம் பூவே உனக்காக. இந்தத் திரைப்படம்  1996 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் விக்ரமன் இயக்கிய அஜித் திரைப்படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்தத் திரைப்படம் 1998-ஆம் ஆண்டு வெளியானது.

முருகதாஸ் : இவர் இயக்கிய அஜித் திரைப்படம் தீனா இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது.  முருகதாஸ் இயக்கிய விஜய் திரைப்படம்  கத்தி இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் திரைப்படம். இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் விஜயின் துப்பாக்கி திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியானது.

murugadhas
murugadhas

எஸ் ஜே சூர்யா : இவர் இயக்கத்தில் வெளியான அஜித் திரைப்படம் வாலி. இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அடுத்ததாக எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கிய விஜய் திரைப்படம் குஷி இந்தத் திரைப்படம் 2000ம் ஆண்டு வெளியானது.

வசந்த்: இவர் இயக்கிய அஜித் திரைப்படம் ஆசை. இந்தத் திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியானது. வசந்த் இயக்கிய விஜயின் திரைப்படம் நேருக்கு நேர். இந்தத் திரைப்படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

vasanth
vasanth

எழில்: இவர் இயக்கிய அஜித் திரைப்படம்  பூவெல்லாம் உன் வாசம். இந்த திரைப்படம் 2001ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் எழில் இயக்கிய விஜய் திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது.

விஜய்: இவர் இயக்கிய விஜய் திரைப்படம் தலைவா. இந்தத் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இத்திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. விஜய் அவர்கள் இயக்கிய  அஜித் திரைப்படம் கிரீடம். இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்ற திரைப்படம்.

vijay
vijay

பேரரசு: இவர் இயக்கிய விஜய் திரைப்படம் திருப்பாச்சி. இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம். இத்திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. பேரரசு இயக்கிய அஜித் திரைப்படம் திருப்பதி. இந்த திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றோர் திரைப்படம்.

Leave a Comment