தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை சந்தித்தது. இதனை அடுத்து தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தன்னை சந்தித்த பொழுது அட்வைஸ் செய்ததாகவும் அதனை ஏற்றுக் கொண்டு தற்போது நடித்து வருவதாகவும் ராகவா லாரன்ஸ் சமீப பேட்டியில் கூறியுள்ள நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்திருந்தாலும் கடைசியாக இவருடைய நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி படும் தோல்வியினை சந்தித்தது. எனவே இந்த திரைப்படத்திற்குப் பிறகு ருத்ரன் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வந்தது.
ஆனால் நேற்று பல திரையரங்குகளில் ரிலீசான ருத்ரன் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில் ருத்ரன் படத்தில் ஈடுபட்ட ராகவா லாரன்ஸ் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான் பொதுவாக ஒரு வருஷத்திற்கு ஒரு படத்தில் தான் நடித்து வந்தேன். எனவே விஜய் அவர்கள் தன்னிடம் இது என்ன ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் கண்டினியூவா பண்ண மாட்டீங்களா? கண்டினியூவா படம் பண்ணலாம்ல என கேட்டாராம் அதற்கு ராகவா லாரன்ஸ் கண்டிப்பா பண்ணலாம் பிரதர் எனக் கூறினாராம்.
பிறகு கோவிலுக்கு செல்லும் பொழுது ஒரு பையன் ரொம்ப நேரமா தன்னை பார்க்க வேண்டுமென நின்று கொண்டிருந்தாராம் எனவே அவரை கூப்பிட்டு பேசும் பொழுது நான் உங்க பேன் தலைவா வருஷத்துக்கு இரண்டு படம் எடுக்கலாம்ல எங்களுக்கு ஒரு மாறி இருக்கு ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் தரிங்க என கண் கலங்கினாராம்.