அஜித் நிராகரித்த கதையில் நடித்த விஜய்.! படம் வெளிவந்து என்ன ஆனது தெரியுமா.?

0
ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர்  தளபதி விஜய். இவர் அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து  தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வாரிசு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.

இந்த படத்தை எதிர்த்து வெளியான அஜித்தின் துணிவு திரைப்படமும் உலகம் முழுவதும் நல்ல வசூலை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது. தளபதி விஜய் திரையுலகில் பல ஹிட் படங்கள் கொடுத்து இருந்தாலும் அவருடைய சினிமா கேரியரில்  மிக முக்கியமான படமாக இன்றளவும்  பார்க்கப்படுவது கில்லி திரைப்படம் தான்.

ஏனென்றால் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் நடத்தியது. தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு கில்லி உருவானது இந்த திரைப்படம் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தளபதி விஜயின் ஸ்டைல் சிறப்பாக இருந்ததால் இந்த படம் பிளக்பஸ்டர் ஹிட் அடித்தது. உண்மையில் கில்லி திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் கிடையாதாம். தரணி முதலில் இந்த கதையை நடிகர் அஜித்திடம் தான் கூறியிருக்கிறார் அஜித்திற்கு இந்த கதை பிடித்திருந்தாலும்..

தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் இப்பொழுது நடித்தால் சரிப்பட்டு வராது எனக் கூறி மறுத்து விட்டாராம். பிறகு இயக்குனர் தரணி மனம் தளராமல் தளபதி விஜயை சந்தித்து படத்தின் முழு கதையை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்து போகவே கில்லி என பெயர் வைக்கப்பட்டு  உடனடியாக படமாக எடுக்கபபட்டது.