பாகுபலி படத்தில் இந்த கதாபாத்திரம் மட்டும் தான் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் பிரபாஸ் ஓபன் டாக்

0

2015ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு தமிழ் இந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாகிய திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களிடம் வைரலாகி வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது, மேலும் படத்தில் பிரபாஸ் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

இந்திய அளவில் அனைவராலும் கவர்ந்த பிரபாஸ் அடுத்ததாக சஹோ படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின்  புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபாஸ் இடம் தளபதி விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது தளபதி விஜய் பாகுபலி படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பொருத்தமாக இருக்கும் என கேட்டார்கள், அதற்கு பிரபாஸ் விஜய்க்கு பாகுபலி கதாபாத்திரம் தான் பொருத்தமாக இருக்கும், என சற்றும் யோசிக்காமல் அவர் கூறினார் இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.