‘தளபதி 68’ படத்தின் மாஸ் அப்டேட்.! அஜித் பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய்..

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வரும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை கண்டு வருகிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அடுத்தடுத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை தொடர்ந்து விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி சேரப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தெலுங்கு இயக்குனரின் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதனை அடுத்து அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு ரசிகர்களும் எந்த இயக்குனர் என தெரியாமல் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவர்களுடைய கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்து விஜய்யின் பிறந்தநாள் தினத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு அதிகாரபூர்வமான அறிவிப்போடு மட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் தளபதி 68 குறித்த தகவல்கள் வெளியாக இருக்கிறது.

Leave a Comment