விஜய் 66 : படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிரா.. இல்லையா.. பேட்டியில் அவரே சொன்ன உண்மை தகவல்.

திரை உலகை பொறுத்தவரை படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினால் போதும் ஆட்டோமேட்டிக்காக ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அந்த வகையில் தளபதி விஜய் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படியான படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து அதை தொடர்ந்து தற்போது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அடுத்தடுத்த இயக்குனர்களுடன் கதையை கேட்டு ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த வகையில் தமிழைத் தாண்டி தெலுங்கில் முதல் முறையாக வம்சி என்ற இயக்குனருடன் கதை கேட்டு உள்ளார் அது அவருக்கு பிடித்து போனதால் அந்த திரைப்படம் வெகு விரைவிலேயே உருவாக இருக்கிறது. பிரமாண்ட பொருட் செலவில் தில் ராஜூ என்பவர் படத்தை எடுக்க இருக்கிறாராம் மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க தமன் ரெடயாக  உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் பீஸ்ட் திரைப் படத்தை முடித்துவிட்டு வருவதற்குள்  எல்லாம் ரெடியாக இருக்க படத்தின் கதைக்கு ஏற்றவாறு  ஒவ்வொருவரையும் செலக்ட் செய்து வருகிறது படக்குழு. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க உள்ளார் என்ற தகவல் கூறப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என கூறப்பட்டது ஆனால் இந்த குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறி உள்ளார் நான் தளபதி 66 படத்தில் நடிக்கவில்லை என தெளிவாக கூறி வீடியோ இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment