சென்னையில் இப்படி ஒரு பிரமண்டமான செட்டை போட போகும் விஜய் 65 .? தளபதி படமுன்னா சும்மாவா.?

தமிழ் திரை உலகில் தொடர் ஹிட் படங்களை கொடுப்பதோடு தனது படத்தின் வசூலை அடுத்த படத்தின் வசூல் ஓவர்டேக் செய்ய செய்யவேண்டும் எப்படி பண்ணினால் அதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பது வரை கணக்கு போட்டு நடிக்க கூடியவர் நடிகர் விஜய்.

அப்படித்தான் சமீபகாலமாக இவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படத்தின் வசூலை ஓவர்டேக் செய்யும் அதுபோல மாஸ்டர் படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65வது திரைப்படத்திற்காக நெல்சன் திலிப்குமார் உடன் கூட்டணி அமைத்து உள்ளார் இந்த படத்தில் நிச்சயம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பதால்  இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என பலரும் கூறுகின்றனர்.

இது அவருக்கு திரை உலகில் இன்னொரு மிகப்பெரிய சிறப்பான படமாக இருக்கும் என கூறப்படுகிறது அப்படித்தான் இந்த இயக்குனரும் இவர் சாதாரண இயக்குனர் கிடையாது இவர் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவில் இன்று வரை நிலைத்து நிற்கக்கூடிய படங்களாகவே இருக்கின்றன அதனால் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை.

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜாவில் முதல் கட்ட படப்பிடிப்பு எங்க நடந்தது அப்பொழுதே சண்டைக்காட்சிகள் பாடல்கள் என உட்பட பல முக்கிய காட்சிகளை அங்கே படமாக்கப்பட்டது அதை தொடர்ந்து தற்போது தாயகம் திரும்பி உள்ள விஜய் 65 படக்குழு சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் தற்போது நிலவி வரும் சூழலில் அதற்கு சாதகமாக இல்லாததால் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை பெரிய செட் ஒன்று அமைத்து அதில் படத்தை எடுக்க முடிவு செய்துள்ளது படக்குழு.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து வருவதால் எல்லாத்துக்கும் ஓகே சொல்லி உள்ளது.

சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஷாப்பிங் மால் மூடப்பட்டு உள்ளதால் அது போன்ற ஒரு செட்டையை தற்பொழுது போடப்பட உள்ளது படத்தை வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஜனவரி பொங்கலில்  வெளியிட திட்டமிட்டுள்ளார்.

படக்குழு அதிரடியாக இறங்கி வேலையை மும்முரம் காட்டி வருகிறது இந்த செட்டை உடனே போட்டு இரண்டாம் கட்ட காட்சிகளை படமாக்க படக்குழு தீவிரம் காட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment