விஜய் 65-க்கு போட்டியாக களம் இறங்கும் மிகப்பெரிய படம்.! 2022 -ல் யார் கை ஓங்கும்.! மோதி கொள்ள ரெடியாக இருக்கும் தயாரிப்பு நிறுவனக்கள்.

விஜய் தனது மாஸ்டரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் படத்தில் நடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்தத் திரைப்படத்திற்காக மிக சுறுசுறுப்பாக காணப்படுகிறார் விஜய். இந்த படத்திற்காக அந்த டீம் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே பல தடைகளைத் தாண்டி இந்த படத்திலும் கமிட்டாகியுள்ளார் இந்த படத்திற்காக அவர் 3 கோடி சம்பளம் வாங்கி நடிக்கிறார்.

படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த திரைப்படத்தை எப்படியாவது வருகின்ற 2022 ஆண்டு பொங்கல் அன்று குறிவைத்து படத்தை மிக மிக சுறுசுறுப்பாக எடுக்க ஆயத்தமாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்பொழுதும் சோலோவாக வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்த எப்பொழுதும் தயாராக இருக்கும் அதுபோன்று தான் இப்போது குறிவைத்து உள்ளது ஆனால் அதற்கு போட்டியாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் களமிறங்குகிறது. இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தை 800 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது.

இதனால் வருகிற பொங்கல் அன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போது தோன்றியுள்ளது ஏனென்றால் இரண்டு இயக்குனர்களும் திறமைவாய்ந்த இயக்குனர்கள் என்பதால் படம் வேற லெவல் இருக்கும் ஆனால் இந்த ரேஸில்  யார் ஜெயிப்பார் என்பது மட்டுமே தற்போது மக்களின் கேள்விக்குறியாக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்பொழுதும் தனக்கு போட்டியாக வருபவர்களை விளம்பர படத்தின் மூலமே அடித்து தூள் கிளப்பும் ஏனென்றால் அந்த அளவிற்கு விளம்பரங்களை செய்து அந்த திரைப்படத்தை காணாமல் ஆக்கி விடும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த அளவுக்கு தனது திறமையை கையாளும் இதனால் இந்த ரேஸில் யார் இந்த போகிறார் என்பது கேள்வி குறி தான்.

ponnin-selvam-tamil360newz
ponnin-selvam-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment