கொளுத்துங்கடா வெடிய.. தளபதி 65 இந்த தேதியில் தான் பிரமாண்டமாக வெளியாகப் போகிறதாம்.!

0

Vijay 65 is going to be released on this date : தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கொரனோ ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது, ஆனால் ஏப்ரல் மாதமே இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டியது.

இந்த நிலையில் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் அடுத்ததாக நான்காவது முறையாக மீண்டும் முருகதாஸுடன் விஜய் இணைய போவதாக தகவல் வெளியானது. முருகதாஸ் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, மேலும் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் இசையமைக்க இருக்கிறார், அதுமட்டுமில்லாமல் படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரம் விரைவில் தெரியவரும்.

vijay murugadas
vijay murugadas

தளபதி 65 திரைப்படம் கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்த பிறகு அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது இந்த நிலையில் படத்தை 2021 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாம்.

அப்போ அடுத்த வருடம் தீபாவளி சரவெடி தான் என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.