கேட்கிற நபர்களை விஜய் 65- ல் இழுத்து போடும் தயாரிப்பு நிறுவனம்.? இப்போ இணைந்தது யார் தெரியுமா.? கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இத்திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு காரணம் விஜய்யின் சமீபகால திரைப்படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொட்ட ரெடியாக இருக்கிறது.

அதற்கு ஏற்றார்போல் நெல்சன் திலிப் குமார் திறமையுள்ள நடிகர்களை இதில் இழுத்து போட்டு வருகிறார். பூஜா ஹெக்டே தொடங்கி தற்போது காதல் சம்பந்தப்பட்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட செல்வராகவன் வரை தற்போது இந்த படத்திற்கு இழுத்துப்போட்டு உள்ளனர்.

சமீபகாலமாக திரையுலகில் படங்களை இயக்குவதை தவிர்த்து விட்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் கொடுத்த இயக்குனர்கள் பல அவர்களில் ஒருவராக இந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் இயக்குனர் செல்வராகவன்.

இவர் எல்லாம் சினிமாவில் நடிப்பாரா என்பது ஆச்சரியமாக  இருந்த நிலையில் சாணி காயிதம் படத்தில் முதல் முறையாக நடித்துவருகிறார் அதைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக யூடிப்பில் வலைப்பேச்சு நண்பர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

விஜய் 65 திரைப்படத்தில் விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் தெற்கில் இருந்து  டாப் ஹீரோ ஜான் ஆபிரகாம் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க தற்போது கைகோர்த்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இப்படி இருக்க இந்த லிஸ்டில் செல்வராகவனும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியாமல் வில்லை. ஆனால் விஜய், செல்வராகவன் கூட்டணி தளபதி 65 திரைப்படத்தில் இணைந்து  நடித்தால் சிறப்பாக இருக்குமென தற்போது கனவு காண ஆரம்பித்து உள்ளனர்.

Leave a Comment