ரீமேக் படத்தில் விஜய் நடித்திருப்பதை பார்த்து இருப்பீர்கள்.! ஆனால் விஜயின் 5 திரைப்படத்தை ரீமேக் செய்துள்ளார்கள் அது தெரியுமா உங்களுக்கு.!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தளபதி விஜய், இவர் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள், அதற்கு தகுந்தார்போல் சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் பட்டையைக் கிளப்புகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் இந்த அளவிற்கு உயர்வதற்கு காரணம் ரீமிக்ஸ் திரைப்படங்களும் ஒரு காரணம் என கூறுகிறார்கள் தளபதி விஜய் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மாபெரும் ஹிட்டடித்த பல திரைப்படங்களின் தமிழ் ரீமிக்ஸ் இல் நடித்துள்ளார்.

அந்த அனைத்து திரைப்படங்களும் தமிழில் மாபெரும் வெற்றியை பெற்றது அவர் நடித்த கில்லி, போக்கிரி ஆகிய திரைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும், இந்நிலையில் விஜய்யை வைத்து தமிழ் இயக்குனர்கள் சொந்தமாக இயக்கிய சில திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் பூவே உனக்காக இந்த திரைப்படம் ஹிந்தியில் பாதாய் ஓ பாதாய் என்ற பெயரில் ரீமேக் ஆனது அதேபோல் 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மாபெரும் ஹிட்டடித்த லவ்டுடே திரைப்படமும் கியாயே பியார் கே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அதேபோல் விஜய் நடிப்பில் வெளியாகிய பிரியமுடன் திரைப்படத்தை ஹிந்தியில் தீவானா மையின் தீவானா என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். அதேபோல் குஷி திரைப்படத்தை குஷி என்ற ரீமிக்ஸ் செய்யப்பட்டது, அதன்பிறகு துப்பாக்கி திரைப்படத்தை ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள் இப்படி விஜய்யின் பல திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment