நயன்தாராவுக்காக நாற வேலையை பார்த்த விக்னேஷ் சிவன்.! இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி திரைப்படங்களை இயக்கி வருபவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அந்த வகையில் சிம்புவை வைத்து முதன்முதலாக போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கினார் அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாராவை காதலிக்க தொடங்கினார் விக்னேஷ் சிவன்.

பின்பு தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல், பாவ கதைகள், ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த நிலையில் தற்பொழுது அஜித்தை வைத்து ஏ கே 62 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் பட குழு வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது. மேலும் தற்பொழுது அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முதன்முதலில் சமந்தாவுக்கு பதில் திரிஷா தான் நடிக்க வேண்டியது ஆனால் அந்தத் திரைப்படத்தில் டைட்டிலில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை விக்னேஷ் சிவன் போடுவேன் என்றதால் திரிஷா நான் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என விலகிக் கொண்டார். அதன் பிறகு தான் இந்த திரைப்படத்தில் சமந்தா நடிக்க சம்மதித்தார்.

விக்னேஷ் சிவன் இயக்குனர் மட்டுமல்லாமல் தற்பொழுது தயாரிப்பாளராகவும் உருமாறி உள்ளார். அஜித்தை வைத்து இயக்கம் விக்னேஷ் சிவன் அஜித்திற்கு ஜோடியாக யாரைப் போடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது இந்த நிலையில் பட குழு அஜித்திற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், திரிஷா, காஜல் அகர்வால், ஆகியவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் விக்னேஷ் சிவன் இந்த மூன்று நடிகைகளில் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது அதுமட்டுமில்லாமல் படக்குழு இன்னும் சில நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது ஆனால் அவர்களையும் விக்னேஷ் சிவன் ரிஜெக்ட் செய்துள்ளார் இப்படி இழுத்துக் கொண்டு இருந்த இந்த விஷயம் கடைசியில் நயன்தாராவிடம் வந்து முடிந்துள்ளது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தன்னுடைய மனைவியை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதனால்தான் மற்ற நடிகைகளை நாசுக்காக கழட்டி உள்ளார். அதேபோல் நயன்தாராவுக்கு கடந்த வருடத்தில் பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறவில்லை. அதனால் சற்று சரிந்து போன நயன்தாராவின் மார்க்கெட்டை உயர்த்தி விடுவதற்காக தான் விக்னேஷ் சிவன் இப்படி ஒரு நார வேலையை பார்த்துள்ளார் என பலரும் விக்னேஷ் சிவனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment