அஜித் படத்தை இயக்க போகும் சந்தோஷத்தில் தூக்காமல் விடிய விடிய சம்பவம் செய்த விக்னேஷ் சிவன் – என்ன பண்ணினார் தெரியுமா.?

சினிமாவுலகில் காசு பார்க்க வேண்டுமென்றால் முதலில் தனது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை சரியாக செய்து வெற்றி மேல் வெற்றியை கண்டு ஒருவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். முதலில் இவர் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின்..

பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மற்றும் பிஸ்னஸ் மேன்னாகவும் தன்னை மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.இயக்குனராக தமிழில் முதலில் இவர் சிம்புவை வைத்து போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார் அதன்பின் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம்.

இப்பொழுது காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி உள்ளார்.  இப்படி இருக்கும் இவர் அஜித்குமாரின் படங்களுக்கு ஒரு சில பாடலை பாடியுள்ளார். அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு.. வலிமை படத்தில் நீங்க வேற மாதிரி அம்மா பாடல் போன்றவற்றை இப்படி எழுதியிருந்தார்.

இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்த நிலையில் தற்போது அஜித்தின் 62 வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி மிகப் பெரிய கார்பரேட் நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் முறையாக அஜித்தின் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளதால் அவருக்கு அளவற்ற சந்தோஷம் கிடைத்துள்ளதாம் மேலும் விடியவிடிய அந்த சந்தோஷத்தை கொண்டாட வெடி வெடித்து கொண்டாடியதாக அறிவித்துள்ளார். கொண்டாட்ட வீடியோவையும் விக்னேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment