பிரபல உணவகத்திற்கு சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ஆசை மனைவி நயன்தாராவிற்காக வெளியிட்டுள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன்.
அதன் பிறகு இவர் திரைப்படம் இயக்குவதற்காக பல முயற்சிகள் செய்தும் எந்த ஒரு நடிகரும் இவருடைய திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொள்ளவில்லை. அந்த வகையில் ஒரு திரைப்படம் தான் நானும் ரவுடிதான் இந்த திரைப்படத்தின் கதையை பலருக்கும் சொன்ன நிலையில் எந்த ஒரு நடிகரும் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டார் மேலும் நயன்தாராவும் இதில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் விக்னேஷ் சிவனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அதாவது இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா காதலிக்க தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.
மேலும் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வரும் இவர்கள் இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார்கள். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் AK62 திரைப்படத்தின் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

இதற்கான பணியில் ஈடுபட்டு வரும் விக்னேஷ் சிவன் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் பிறகு வாடகைத் தாயின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தை பெற்று கொண்டார்கள் இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல மான்சூன் சாட் கார்னர் உணவகத்தில் இருந்து பானி பூரி தயார் செய்யும் வீடியோவை பகிர்ந்து நான் என் துணையை மிஸ் பண்றேன் என பதிவிட்டுள்ளார்.