அஜித்திற்கு தரமான பதிலடி கொடுக்க மெகா ஹிட் பட நடிகரை தட்டி தூக்கி விக்னேஷ் சிவன்.? எல்லாம் நயன்தாராவின் ராஜதந்திரம் தான்..

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக புது இயக்குனர்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது அது மட்டும் இல்லாமல் இளம் இயக்குனர்கள் நல்ல தரமான கதைகளையும் நல்ல திரைப்படங்களையும் கொடுத்து வருகிறார்கள் அதனால் இளம் இயக்குனர்கள் கதையில் நடிப்பதற்காக முன்னணி நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் கோமாளி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் பிரதீப் ரங்கநாதன்.

இவர் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் லவ் டுடே இளைஞர்கள் மற்றும் 2k கிட்ஸ் ஆகியோர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வெறும் ஐந்து கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் வரை ஈட்டியது அதனால் கிட்டத்தட்ட பத்து மடங்குக்கு மேல் லாபத்தை பெற்றது இந்த திரைப்படம் இதனால இந்த திரைப்படத்திற்கு நூறாவது நாள் விழாவும் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அவரிடம் கதை கூறியுள்ளார் அந்த கதையை கேட்ட பிரதிப் ரங்கநாதன் ஓகே சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஆனால் விக்னேஷ் சிவன் குறித்த நேரத்தில் கதையை ரெடி பண்ணாமல் அமைதியாக இருந்துள்ளார் அதனால் அஜித் இது உங்களுக்கு சரிப்பட்டு வராது என கோபப்பட்டு இந்த திரைப்படத்தை அப்படியே நிறுத்திவிட்டார் அதனால் ஏ கே 62 திரைப்படத்திற்கு இயக்குனராக மகிழ் திருமேனி இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் ஏ கே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவனை நீக்கி விட்டதால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தகவல் வெளியாகி உள்ளது இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் தன்னை நீக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த கதையை வெறித்தனமாக உருவாக்குவார் என கூறப்படுகிறது எல்லாம் நயன்தாராவின் ராஜ தந்திரம தான் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment