திருமணம் செய்தவுடன் நடிகை நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ் சிவன் – கண்கலங்கும் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் அண்மையில் சிறப்பாக நிறைவு பெற்றது இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் ரஜினி, ஷாருக்கான், அட்லி, அனிருத், கார்த்தி, சூர்யா போன்ற பலரும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர்.

விக்னேஷ் சிவனுக்கு ரஜினி தாலி எடுத்துக்கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைத்தார். இவர்களது கல்யாணம் மிக விமர்சையாக இந்து முறைப்படி நடைபெற்றது. திருமணத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அவ்வளவு அழகாக தோற்றமளித்தன. திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவருக்கும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தங்க வெள்ளி காசுகளை பரிசாக அளித்தனர்.

இருவரும் திருமணமான அடுத்த நாள் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்த நிலையில் அங்கு ஒரு சர்ச்சையில் சிக்கி அதற்கு மன்னிப்பும் கேட்டு அந்தப் பிரச்சனையும் முடிவடைந்தது. பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இதுவரை எங்களுக்கு ஆதரவு கொடுத்தீர்கள்.

அதுபோல் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து எங்களது சினிமா பயணத்திற்கு ஆதரவு கொடுங்கள் என பேசி உள்ளனர் இந்த நிலையில் தற்போது இவர்கள் குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது அதன்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு பல கண்டிஷன்கள் போட்டுள்ளாராம். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கூட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு முன் கிளாமர் காட்சிகள், நடிகர்களுடன் ரொமான்ஸ் போன்ற அனைத்திலும் தயங்காமல் நடித்து வருவார்கள் ஆனால் திருமணத்திற்குப் பின்பு ஒரு சில நடிகைகள் அதனையெல்லாம் குறைத்துவிட்டு நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மற்றும் சோலோ படங்கள் போன்றவற்றில் தான் நடித்து வருவார்கள் உதாரணத்திற்கு சூர்யாவின் மனைவி ஜோதிகாவை கூட சொல்லலாம்.

ஜோதிகாவும் திருமணத்திற்கு பின்பு நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வந்தார். அதுபோல் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் இனி ஹீரோக்களுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு கூறியுள்ளாராம். இப்படி திருமணமான உடனே கண்டிஷன்கள் விக்னேஷ் சிவன் போட்டு உள்ளதால் நயன்தாரா கவலையில் இருப்பதாக கூறுகின்றனர்

Leave a Comment