80 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களாக இருப்பவர்கள் ஒரு பக்கம் மறுபக்கம் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களிடம் சிறப்பான கதைகளை கூறி ஹிட் படங்களை கொடுத்து வருகின்ற இளம் இயக்குனர்கள் சிலர்.
அப்படி இளம் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் முதலில் நடிகர் சிம்புவை வைத்து போடா போடி என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற காமெடி கலந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தை மக்களுக்கு கொடுத்து அசத்தி இருந்தார்.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது காதலி நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து உள்ள நிலையில் கூடிய விரைவில் படம் திரையரங்குக்கு வெளிவர உள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகரான அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கியதை அடுத்து அவரது அடுத்த திரைப்படமான AK61 படத்தில் வலிமை படத்தின் அதே கூட்டணியுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்.
அடுத்து அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயுள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் உருவாக்கிய அஜித்தின் 61வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ஃபயர் என கமெண்ட் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
