தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகரான அஜித் அவரது ரசிகர்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளவர் அஜித் நடிப்பில் ஹெட்ச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம்.
மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு வரவேற்ப்பை பெற்று குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த படமாக அமைந்தது. மேலும் அஜித் கேரியரில் இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தி சிறப்பாக ஓடியது. வலிமை படக்குழுவின் அதே கூட்டணியுடன் மறுபடியும் இணைந்து அஜித்தின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தை எடுத்து முடிக்க மூன்று மாதங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளாராம் மேலும் இந்த ஆண்டே இந்த 61வது படத்தையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகின்றன இதையடுத்து அஜித் அவரது 62வது திரைப் படத்திலும் கமிட் ஆகியுள்ளார் அப்படி அந்த படத்தை இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் பலரும் அஜித் படம் பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு விக்னேஷ் சிவன் நான் அஜித்தின் இந்த படத்திற்காக கடந்த மூன்று வருடமாக கதையை தயாரித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அப்போ கதை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.