திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி.! வெளியான வைரல் புகைப்படம்..

viki and nayanthara
viki and nayanthara

திரையுலகமே எதிர்பார்த்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களது காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.

இவர்களது திருமணத்திற்கு சினிமா பிரபலங்களான ஷாருக்கான் ரஜினி, சூர்யா, கார்த்தி, அனிருத் போன்ற பலரும் கலந்துகொண்ட நிலையில் ரஜினி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தாலி எடுத்துக்கொடுத்து கல்யாணத்தை சிறப்பித்தார். திருமண ஏற்பாட்டை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர் அந்த அளவுக்கு மிகப் பிரமாண்டமாக செய்திருந்தனர்.

மேலும் திருமணம் மெனுவில் கூட பல புதிய வகை டிஷ்கள் இடம்பெற்றிருந்தன. பலத்த பாதுகாப்புகளுடன் நடந்த இவர்களது திருமணத்தில் எந்த குறையுமின்றி மிகவும் விமர்சியாக நடந்து முடிந்தது. திருமணத்திற்காக 20 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் கோவில்கள் என கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் முதலில் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்த நிலையில் அந்தக் கோவிலில் சில நிபந்தனைகள் காரணமாக பின்பு மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் திருமணத்தை நடத்தி உள்ளனர். அதனால் நேற்று திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும்  சென்றுள்ளனர்.

அப்போது விக்னேஷ் சிவன் வேஸ்டி சட்டையிலும் நயன்தாரா மஞ்ச கலர் புடவையிலும் திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது மேலும் இவர்கள் இருவரும் நாளை செய்தியாளர்களை சந்திப்பதாகவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vikki and nayanthara
vikki and nayanthara