காதலர் தினத்தை முறைப்படி கொண்டாடிய விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி.! இளசுகளை வெகுவாக கவரும் புகைப்படம்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சினிமா உலகில் வயது ஏற ஏற நடிகைகளுக்கு படவாய்ப்புகள் குறைந்தது வழக்கம் ஆனால் நடிகை நயன்தாராவுக்கு மட்டும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் மூக்குத்தி அம்மன் வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியுடன் அண்ணாத்த,  காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றி கண் போன்ற பல்வேறு திரைப் படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

என்னதான் திரையுலகில் இப்படி பிசியாக இருந்தாலும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் நமது ஊர் சுற்றுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.

அப்படி ஜாலியாக இருக்கும் பொழுது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் பாரம்பரிய வேட்டி சட்டை மற்றும் புடவையில் வந்து அசத்தி உள்ளனர் அப்போது இவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

vignesh shivan and nayanthara
vignesh shivan and nayanthara

Leave a Comment