ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா காதல் பற்றி சத்தியம் பண்ணி கூறும் பிரபலம்..

0

தமிழ் சினிமாவில் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவர் மிகவும் தைரியமான பெண் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவ்வாறு தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.தற்பொழுது முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை  காதலித்து வருகிறார். இவர்கள் தற்பொழுது சுற்றுலா தலங்களுக்கு சென்று  தங்களது காதலை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க சினிமா பிரபலங்களை தரக்குறைவாக பேசி அவர்களின் மீது குற்றச்சாட்டு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் நடுவர் பயில்வான் ரங்கநாதன் இவரின் மீது ஏற்கனவே பல சினிமா பிரபலங்கள் கொலைவெறியில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்து விடுவார்கள். இவர்களின் காதல் இன்னும் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்காது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மற்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும்  தற்போது லிவிங் டுகெதர்றில் வாழ்ந்து வருகிறார்கள்.விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு கூறியது அதிர்ச்சி அளித்தது.