தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரத் காதல் ஜோடிகளாக இருந்து வந்தவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார் அப்போதிலிருந்து இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று காலை மகாபலிபுரம் அருகில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணத்திற்கு சில முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே..
திருமண பத்திரிக்கையை விடுத்திருந்த நிலையில் இன்று இவர்களது திருமணத்தில் ஷாருக்கான், ரஜினி, அஜீத், ஷாலினி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி போன்ற பலரும் கலந்து கொண்டனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் பல பாதுகாவலர்களுடன் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
ஆனால் இவர்களது திருமணத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் பலரும் வருத்தத்தில் உள்ளனர் இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ்நாட்டில் உள்ள 20 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு விருந்து வழங்கியுள்ளனர். இவர்களது திருமண நிகழ்வு ஓடிடி இணையதளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியானதை அடுத்து யாரும்..

திருமணத்தின் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு அனுமதி மறுத்திருந்தது. அதனை அடுத்து தற்போது விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கங்களில் நயன்தாராவிற்கு தாலிகட்டி முத்தமிடுவது போன்ற அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன மேலும் புகைப்படம் லைக்குகளையும் குவித்து வருகின்றன.
On a scale of 10…
She’s Nayan & am the One ☝️☺️😍🥰
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️😍🥰 #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022