ஏ கே 62 திரைப்படத்திலிருந்து தன்னை தூக்கி விட்டதால் கடும் வருத்தத்தில் இருக்கிறார் விக்னேஷ் சிவன் தன்னை தூக்கியவர்களுக்கு தரமான சம்பவம் செய்ய புதிய கதையை ரெடி செய்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பல திறமைகளை தனக்குள் வைத்துக் கொண்டு வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தான் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்லா விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை அடைந்தார்.
இந்த நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார் அப்பொழுது விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது தற்பொழுது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார். நானும் ரவுடிதான் திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் மீண்டும் விஜய் சேதுபதி அவர்களை வைத்து காத்து வாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்திருந்தார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தை தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது இந்த திரைப்படம் வெளியாகி 60 கோடிக்கு மேல் வசூல் செய்தது அதனால் இந்த திரைப்படம் வெற்றியடைந்தது. இப்படி வெற்றி வாகை சூடிய விக்னேஷ் சிவன் அவர்களுக்கு ஏகே 62 திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.
விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திடம் கதையை கூறினார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அஜித் திரைப்படத்தில் பணியாற்ற போகிறோம் என்ற பெரும் கனவோடு இருந்த விக்னேஷ் சிவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது ஏனென்றால் அவர் கூறிய கதையில் அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு பெரிதாக உடன்பாடு இல்லை என்பதால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
அவருக்கு பதில் தற்போது மகிழ்த்திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கமான twitter பக்கத்தில் அஜித்தின் டிபியை தூக்கியது மட்டுமல்லாமல் பயோவில் ஏகே 62 நீக்கிவிட்டு விக்கி ஆறு என மாற்றியுள்ளார் இதன் மூலம் அந்த திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விளங்கியதை அவரே கூறியுள்ளதாக பலரும் பேசி வருகிறார்கள்.
ஏகே 62 இலிருந்து தன்னை தூக்கி விட்டதால் விக்னேஷ் சிவன் செம அப்செட்டில் இருக்கிறார். அதனால் தன்னை நீக்கியவர்களுக்காக தரமான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அதனால் அடுத்த படத்திற்கான வேலைகளை மற்றும் கதையை மிகவும் சைலண்டாக செய்து வருகிறாராம். நானும் ரவுடிதான் என்ற பாணியில் அனைவரையும் கவரும் விதமாக புதிய கதையை செதுக்கி வருகிறாராம் இந்த படத்தின் மூலம் தன்னை நீக்கியவர்களுக்கு தரமான பதிலடி கொடுப்பார் என பலரும் கூறி வருகிறார்கள்.