‘ஏகே 62’ படத்தில் இருந்து விலகிய நிலையில் பல தத்துவங்களை கூறும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் சில தத்துவங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக பிரபலமானவர்தான் விக்னேஷ் சிவன்.

இந்த திரைப்படத்தினை இயக்கும் பொழுது நயன்தாரா மற்றும் இவருக்கு இடையே காதல் ஏற்பட கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமான தகவல்களை வந்தது.

எனவே விக்னேஷ் சிவன் தரமான கதையை உள்ள படத்தினை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிறகு திடீரென இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. அதாவது விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் தான் விக்னேஷ் சிவன் அவர்கள் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டாராம்.

எனவே ஏகே 62 திரைப்படத்தினை இயக்குவதற்காக தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் இது தவறான ஒன்று விக்னேஷ் இவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் கூறி வந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் சில தத்துவங்களை பதிவு செய்துள்ளார். அதில், பெரிய அதிசயங்கள் நடப்பதற்கு முன் சின்ன சின்ன தடங்கல் வந்து கொண்டே இருக்குமாம்.. ஆனால் ஒரு நாள் அந்த தடங்கல் எல்லாம் அப்படியே பொடிப்பொடியாய் உடைந்து.. என்ற திரைப்பட வசனத்தை பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

viknesh shivan
viknesh shivan

இதனை அடுத்து, இந்த உலகில் செய் அல்லது செத்து மடி என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை, உங்கள் மன ஆரோக்கியத்திற்கு எது உகந்ததோ அதை செய்தால் போதும் என நடிகை பிரியங்கா சோப்ரா கூறிய வீடியோவை விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். பிறகு தோனி ஒரு பேட்டியில், கிரிக்கெட் விளையாட்டு என்பது வாழ்க்கை உடன் சம்பந்தப்பட்டது. ஒரு நாள் சதம் அடைந்து மகிழ்ச்சியாக இருப்போம்.

இன்னொரு நாள் ஜீரோ ரன் எடுத்து வருத்தமாக இருப்போம் வாழ்க்கையும் அப்படி தான் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் அந்த ஏற்ற இறக்கத்தை நாம் சமப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வீடியோவையும் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இவ்வாறு ஏகே 62 திரைப்படம் இவருடைய கையை விட்டு போன நிலையில் பலரும் இவரை விமர்சனம் செய்து வந்தனர். எனவே இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு மற்றொரு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என தன்னை தேற்றிக் கொள்கிறார் என்பது தெரிகிறது.

Leave a Comment