ஏகே 62 திரைப்படத்தை செதுக்கி வைத்திருக்கும் விக்னேஷ் சிவன்.! அஜித்திற்காக எடுக்கும் முதல் ரிஸ்க்…

0
ak62
ak62

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஒரு சமூக சார்ந்த திரைப்படமாக உருவானதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை பார்த்துக் கொண்டாடி வந்தனர்.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன்  இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அஜித் அவர்கள் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவர்கள் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல், என்று காதல் திரைப்படங்களை கொடுத்து வந்த விக்னேஷ் சிவன் இந்த முறையும் தன்னுடைய பாணியில் ஏகே 62 திரைப்படத்தை எடுக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் ஆவலோடு இருப்பதை எதிர்பார்த்து இயக்குனர்கள் விக்னேஷ் சிவன் அஜித்திற்காக மிகப்பெரிய ஒரு ரிஸ்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது முழுக்க முழுக்க ஏகே 62 திரைப்படம் தன்னுடைய பாணியில் இல்லாமல் புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அந்த வகையில் ஏகே 62 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கிறதாக கூறப்படுகிறது. இதுவரைக்கும் காதல் கமர்சியல் திரைப்படமாக கொடுத்து வந்த விக்னேஷ் சிவன் முதன் முறையாக ஆக்சன் படத்தை கொடுக்க இருப்பதால் ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி நிலையில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது இதனால் மறுபடியும் விஜய் மற்றும் அஜித் மோத உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விரைவில் ஏகே 62 மற்றும் தளபதி 67 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரைக்கும் இந்த இரண்டு படத்தில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.