நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

வெள்ளித்திரையில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்து பின்பு பல திரைப்படங்களில் நிறைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் தமிழில் ஐயா திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டது மட்டுமல்லாமல் மார்க்கெட் உச்சத்தில் புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

ஆம் இவர் நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலித்து வருவது சினிமா பிரபலங்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் நெற்றிக்கண் இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்பொழுது ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டை விக்னேஷ் சிவன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார் ஆம் இந்த படத்தில் இடம்பெறும் இதுவும் கடந்து போகும் என்ற பாடல் நாளை காலை ஒன்பது மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

june 9
june 9

இதனைத்தொடர்ந்து இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த பாடலை பார்ப்பதற்காக பெரும் உற்சாகத்தில் இருக்கிறோம் என்று பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment