விக்னேஷ் சிவன் – நயன்தாரா கழுத்தில் எத்தனை மணிக்கு தாலி கட்டப் போகிறார் தெரியுமா.? சரியான நேரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.

தமிழில் முதலில் சரத்குமாருடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நயன்தாரா இந்த திரைப்படத்தை தொடர்ந்து டாப் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை சினிமா உலகில் தக்க வைத்துக் கொண்டவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இடையில் நயன்தாரா நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இவர்களின் காதலை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தான் இவர்களது திருமண பத்திரிக்கை வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் முதலில் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்த நிலையில் பின்பு இவர்களது திருமணம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது.

மகாபலிபுரத்தில் உள்ள ஒரு பிரைவேட் ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஜூன் 9ஆம் தேதி 5:30 மணியிலிருந்து 7 மணிக்குள் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. மேலும் இவர்களது திருமணத்திற்கு உறவினர்கள் பிரபலங்கள் என மொத்தமாக 200 பேர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு விடுத்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு அஜித் விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் 30 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

திருமணத்திற்கு முன்பாக ஜூன் 8ஆம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்ச்சியை ஓடிடி தளத்தில் வெளியிட கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரியவில்லை.

Leave a Comment