திருமணமான குஷியில் கதையை முடிக்காமால் இருக்கும் விக்னேஷ் சிவன்.! கொந்தளித்த லைக்கா.. அப்போ AK 61 நிலைமை.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்  இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக ஏ கே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை எச் வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்திலிருந்து எந்தவிதமான அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ரசிகர்கள் ak 61 திரைப்படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட்டை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் ஏ கே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் சமிபத்தில் திருச்சியில் நடிபெற்ற துப்பாக்கி சுடும்போட்டியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் ஏ கே 61 படத்தை தொடங்கினர். மேலும் ak61 திரைப்படம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பின்னர் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேடுகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஏகே 62 கதையை முழுமையாக விக்னேஷ் சிவன் அவர்கள் எழுதவில்லை என்றும் இதனால் லைகா நிறுவனம் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் ak 62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் ஏ கே 62 திரைப்படத்தின் கதையை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒன்லைன் கதையை மட்டும் கூறியுள்ளதாகவும் பின்னர் முழு கதை இன்னும் எழுத வில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இதனால் லைகா நிறுவனம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment