இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இவ்வளவு அழகான தங்கையா.! இணையதளத்தில் அடித்து தூக்கும் புகைப்படம்.!

viknesh shivan
viknesh shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2012ம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றதால் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது..

விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தில் நடித்தும் உள்ளார்  2007ஆம் ஆண்டு வெளியாகிய சிவி என்னும் திகில் திரைப்படத்தில்  பெயரில்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்குனர் மற்றும் நடிகராக மட்டுமல்லாமல் பாடலை எழுதுவதிலும் வல்லவர்.

இவர் எழுதிய பாடல்கள் பல ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்தநிலையில் விக்னேஷ் சிவன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருகிறார் இவர்கள் இருவரும் நேரம் கிடைக்கும் பொழுது வெக்கேஷன் என்ற பெயரில் வெளிநாடுகளுக்குச் சென்று அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலானது அதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்பியது உண்டு ஆனால் இதுவரை இருவரும் அதற்கான பதிலை கூறாமல் மௌனம் காத்து வருகிறார்கள். இந்தநிலையில் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு ஒரு தங்கை இருக்கிறார் இதுவரை பலரும் அவரை பார்த்து இருக்க மாட்டார்கள்.

இந்தநிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான தங்கை உங்களுக்கு இருக்கிறாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

vignesh shivan
vignesh shivan