கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மகன் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..

Vignesh Shivan: நேற்று தமிழ்நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் தங்களது குழந்தைகளை கிருஷ்ணர்களாக வேடமணிந்து புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அப்படி விக்னேஷ் சிவன் தனது மகன்கள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கூடுதல் ஸ்பெஷலாக இன்று நயன்தாரா பாலிவுட்டிற்கு அடியெடுத்து வைத்திருக்கும் ஜவான் திரைப்படம் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் நிலையில் இதன் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சஞ்சய் தத் கேமியா ரோலில் நடித்து மிரட்டிவுள்ளார். இவ்வாறு இந்த படம் வெளியாகும் நேரத்தில் தனது கணவருடன் திருப்பதி சென்றுள்ளார் நயன்தாரா மேலும் புதியதாக இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார்.

vignesh shivan
vignesh shivan

20 பேரை மட்டுமே ஃபாலோ பண்ணும் நயன்தாராவை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு விக்னேஷ் சிவன் தனது குடும்பத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் நேற்று தனது குழந்தைகளுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய விக்னேஷ் சிவன் தனது மகன்களின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும் குவிந்து வருகிறது.