எனக்கு வேறு வழி தெரியலை ஆத்தா.! தோனி விஜய்யுடன் விக்னேஷ் சிவன் வைரலாகும் புதிய புகைப்படம்.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய். அதேபோல் கிரிக்கெட்டில் தல என அன்போடு அழைக்கப்படுபவர் தோனி இவர்கள் இருவரும் நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்தியாவில் 14வது ஐபிஎல் போட்டியின் பொழுது வீரர்களுக்கு கொரோனா  பரவியதால் 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

காலையில் மீதம் உள்ள போட்டி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது இந்த நிலையில் துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் செப்டம்பர் 19-ம் தேதி மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் சென்னை வர தொடங்கி உள்ளார்கள்.

தனது குடும்பத்துடன் சென்னை வந்த தல தோனி பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் அப்பொழுது கேரவனில் சிறிது நேரம் உரையாடி உள்ளார்கள் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. மேலும் அந்த புகைப்படத்தில் தோனி விஜய் பட இயக்குனர் நெல்சன் ஆகியோர்கள் இருக்கிறார்கள்.

vignesh
vignesh

இந்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆன நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை பார்த்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் வயிறு 274 டிகிரியில் எரியுது. அந்த ஒரிஜினல் புகைப்படத்தை அனுப்புங்கள் நெல்சன். போட்டோஷாப் செய்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் போட்டோஷாப் செய்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அந்தப் புகைப்படத்திற்கு கேப்டனாக எனக்கு வேறு வழி தெரியலை ஆத்தா என மீம்ஸ் போட்டு உள்ளார்.

vignesh
vignesh