குழந்தைக்காக இதை கூட மறந்துவிட்டீர்கள்.! நயன்தாராவை நினைத்து விக்னேஷ்ஷிவன் உருக்கமான பதிவு.!

0
nayanthara-
nayanthara-

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இப்படி பயணித்த இவர் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த ஜோடி சினிமா, வாழ்க்கை என இரண்டுக்கும் நேரத்தை அழகாக ஒதுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

நயன்தாராவுக்கு திருமணமான பிறகுதான் பட வாய்ப்புகள் அதிகமாக குவிந்த வண்ணமே இருக்கின்றன.  அவரது கையில் கனெக்ட்,  கோல்ட், நயன்தாரா 75, ஜவான் மற்றும் பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி ஓடிக்கொண்டிருக்கிறார் மறுபக்கம் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து 62 ஆவது படத்தை எடுக்க திட்டம் போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் நயன்தாரா 38 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதனை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு அழகிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் அவர் உங்களுடன் இது என்னுடைய ஒன்பதாவது பிறந்தநாள் நயன்.. ஒவ்வொரு பிறந்தநாளும் நீங்கள் சிறப்பாகவும் மறக்க முடியாததாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறீர்கள்..

ஆனால் கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு வாழ்க்கையை தொடங்கி இருப்பதால் இது எல்லாவற்றிலும் மிகச் சிறப்பு வாய்ந்தது அழகான ஆசிர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் தாயாக நான் எப்பொழுதும் உன்னை அறிந்திருக்கிறேன் உன்னை ஒரு சக்தி வாய்ந்த மனிதனாக பார்த்தேன் நீங்கள் எதை செய்தாலும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்கிறீர்கள்..

இத்தனை வருடங்களில் நான் ஒரு வித்தியாசமான நபரை பார்த்தேன். இன்று நான் உன்னை ஒரு தாயாக பார்க்கும் பொழுது இதுவே உங்களின் மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம் நீங்கள் இப்பொழுது முழுமையாகி விட்டீர்கள்.. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் குழந்தைகள் உங்கள் முகத்தை முத்தம் இடுவதால் இத்தனை நாட்கள் நீங்கள் மேக்கப் போடுவதில்லை இத்தனை வருடங்கள் உன்னை விட அழகான ஒருவரை நான் பார்த்தது இல்லை என நயன்தாராவை பற்றி புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவித்தார் கணவர் விக்னேஷ் சிவன்..