தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் தம்பதிகள் இருந்தாலும் சமீப காலமாக மிகவும் ஹாட் டாப்பிக்காக பேசப்படுவது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியை பற்றிதான், இவர்கள் இருவரும் செய்யும் காதலைப் பார்த்து பல சினிமா பிரபலங்கள் பொறாமையில் இருக்கிறார்கள், அதேபோல் இவர்கள் இருவரும் இதுவரை திருமணத்தைப் பற்றி எதுவுமே பேசவில்லை.
திருமணத்தை பற்றி தான் பேசவில்லை ஆனால் அடிக்கடி ஊர் சுற்றிக்கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள், நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன. என்னதான் பிஸியாக இருந்தாலும் தனது காதலருடன் நேரத்தை செலவிடுவதை மறக்காமல் செய்துவருகிறார்.

இப்படி மாறி மாறி இவர்கள் இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள், இந்தநிலையில் விக்னேஷ் அவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், இவருடன் நயன்தாராவும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், இந்த நிலையில் அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது, இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.
Celebrating nanbans birthday ? ?
Many many happy returns to you @VigneshShivN #HBDVigneshShivN #Nayanthara pic.twitter.com/xqh3f8WkUP— Dharan kumar (@dharankumar_c) September 18, 2019