லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிப்பது மற்றும் சோலோ படங்களிலும் நடித்து வெற்றியை ருசிப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் இவரது இடத்தை பிடிக்க முடியாமல் மற்ற நடிகைகள் தள்ளாடி வருகின்றனர் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு இப்போ 10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கையில் இப்போ ஜவான், கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றிலும் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.
ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது சினிமா உலகில் சூப்பராக ஓடிக்கொண்டிருக்கின்ற இவர் அண்மையில் இயக்குனரும், காதலருமான விக்னேஷ் சிவனை ஜூன் ஒன்பதாம் தேதி சினிமா பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது முன்னிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் சினிமாவில் பயணித்தாலும் மீதி நேரங்களில் ஒன்றாக இணைந்து பொழுதை கழிக்கின்றனர்.

அப்படி இப்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு உடனடியாக விக்னேஷ் சிவனை அழித்துக் கொண்டு ஸ்பெயின் நாட்டிற்கு போய் உள்ளார். அதுவும் பத்து நாள் ஸ்பெயின் நாட்டில் ஓய்வெடுப்பதற்காக போனார்கள் என கூறப்படுகிறது தொடர்ந்து இவர்கள் ஸ்பெயின் நாட்டில் இருந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகின்றன.
ஏன் சில தினங்களுக்கு முன்பு 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டில் இந்திய கொடியை கையில் ஏந்தி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரிய அளவில் வைரலானது அதனை தொடர்ந்து இப்பொழுது ஸ்பெயின் நாட்டில் ஒரு வீதியில் விக்கி – நயன்தாரா ரொமான்டிக் பண்ணும் புகைப்படங்கள் சில தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

