வெக்கேஷனுக்காக தனி விமானத்தில் காதலரை இழுத்துக்கொண்டு செல்லும் நயன்தாரா.!

0

வெள்ளித்திரையில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் தான் நயன்தாரா இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய்,அஜித்,சிவகார்த்திகேயன்,சூர்யா போன்ற பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

இதனைதொடர்ந்து தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடமாக நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும் மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த திரைப்படம்  நானும் ரவுடி தான் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் பொழுதே காதல் மலர்ந்து விட்டது.

இந்நிலையில் இவர்கள் 2 பேரும் காதல் பறவைகளாக பல இடங்களில் சுற்றி திரிந்து வருகிறார்கள் அவ்வாறு இவர்கள் சுற்றும் பொழுது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதே போல் தற்போதும் சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தாலும் இவர்கள் 2 பேரும் கொச்சின் போகிறார்கள் என்பது மட்டும் தெரிய வருகிறது ஆம் இவர்கள் 2 பேரும் விமானத்தில் உள்ளே உட்கார்ந்து பேசிக்கொள்கிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்ததுகொச்சின் சுற்ற போகிறீர்களா என அவர்களை கிண்டல் அடித்து வருகிறார்கள்.